உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக நலம் பெற வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு

உலக நலம் பெற வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு

தொண்டாமுத்தூர்;வடிவேலாம்பாளையத்தில், வடிவேல் முருகன் அறுபடை வீடு முருக பக்தர்கள் சபையின், பொன்விழாவையொட்டி, உலக நலம்பெற வேண்டி, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது.வடிவேல் முருகன் அறுபடை வீடு முருக பக்த சபா துவங்கி, 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பொன்விழா நிகழ்ச்சி, வடிவேலம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.இதில், நேற்றுமுன்தினம் இரவு, உலக மக்கள் நலன் வேண்டி, 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து குச்சியாட்டம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு, வடிவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.இதில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், நாக சக்தி பீடம் பாபுஜி சுவாமிகள், சின்மயா மிஷன் அஜித் சைதன்யா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை