| ADDED : டிச 28, 2025 05:17 AM
கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று, 14 ஆயிரத்து 464 பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.மாநிலம் முழுவதும் கடந்த நவ., முதல் இம்மாதம், 14 வரை எஸ்.ஐ.ஆர்.. பணி நடந்தது. தொடர்ந்து வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், பெயர் இல்லாதோர், வரும் புத்தாண்டில் 18 வயது பூர்த்தியடைவோர் பெயரை வாக்காளர் பட்டியவில் பெயர் சேர்க்கும் வகையில், நேற்று ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம் துவங்கியது.மாவட்டத்திலுள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 3,563 ஓட்டுச்சாவடிகளில் இம்முகாம் நடந்தது. இதில் புதிய வாக்காளர் தங்களது பெயர் சேர்க்க படிவம் 6- ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.மேட்டுப்பாளையத்தில்-1535, சூலூர் - 1092, கவுண்டம்பாளையம் - 2084, கோவை வடக்கு - 1786, தொண்டாமுத்தூர் - 1681, கோவை தெற்கு - 966, சிங்காநல்லூர் - 1065, கிணத்துகடவு- 1764, பொள்ளாச்சி - 1332, வால்பாறை - 1159 என, மொத்தம், 14 ஆயிரத்து 464 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இன்று மாலை இம்முகாம் நிறைவடைகிறது.