உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அம்பாள் பள்ளிகளின் 15வது ஆண்டு விழா

அம்பாள் பள்ளிகளின் 15வது ஆண்டு விழா

கோவை, : ஆறுக்குட்டி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் கீழ், சிறுமுகையில் இயங்கி வரும் அம்பாள் பள்ளிகளின் 15வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் அம்பாள் பழனிசாமி, செயலர் கீதா, விழாவிற்கு தலைமை வகித்தனர். பள்ளி வழிகாட்டி சசிக்குமார் சாம்ராஜ், பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பள்ளியின் மூத்த முதல்வர் திருமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக, நகைச்சுவை நடிகர் தாமு மற்றும் இந்திய விமானப் படையின் படைத் தலைவர் மோனிகா பிஜ்லானி கலந்துகொண்டனர்.விருந்தினர்கள், குழந்தைகளின் வளர்ப்பில் ஆசிரியர்களின் முயற்சிகள், செயல்பாடுகள் மற்றும் பிள்ளை வளர்ப்பு கலை, நன்னடத்தையுடன் மாணவர்கள் வளர்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். விழாவில், பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் நுாறு சதவீத தேர்ச்சி பெறச்செய்த ஆசிரியர்களையும் பாராட்டி சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ