உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  23வது முறையாக குண்டு மிரட்டல்

 23வது முறையாக குண்டு மிரட்டல்

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, 23 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இ-மெயிலில் வந்த தகவலில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறையில் இரு ஆர்.டி.எக்ஸ்., குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம், 11:45 மணிக்கு அவை வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக, நடிகை நிவேதா பெத்துராஜ், துணை முதல்வர் உதயநிதி பெயரையும் குறிப்பிட்டு, இ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவிகள் உதவியுடன், சோதனை நடத்தினர். வழக்கம் போல் அது புரளி என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை