உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குட்டையில் குளிக்க சென்ற 3 பேர் பலி

குட்டையில் குளிக்க சென்ற 3 பேர் பலி

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள போகம்பட்டி பகுதியில் தந்தை, மகள் மற்றும் அவரது அண்ணன் மகள் ஆகிய மூன்று பேர் குட்டையில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பலியாகினர். போகம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்,40 மற்றும் அவரது மகள் தமிழ்ச்செல்வி, மணிகண்டன் அண்ணன் மகள் புவனா. தமிழ்செல்வியும், புவனாவும் அரசு பள்ளி மாணவிகள். 3 பேரும் குட்டையில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியாகினர். சுல்தான்பேட்டை போலீசார், சூலூர் தீயணைப்பு வீரர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை