உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2  பொதுத்தேர்வை சந்திக்க கோவையில் 33,650 பேர் தயார்! 

பிளஸ் 2  பொதுத்தேர்வை சந்திக்க கோவையில் 33,650 பேர் தயார்! 

கோவை:கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க, 33 ஆயிரத்து 659 பேருக்கு, ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 127 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சி.இ.ஓ., பாலமுரளி தெரிவித்தார்.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை எழுதுவர்.கோவை மாவட்டத்தில், 363 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 33 ஆயிரத்து 659 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். இவர்களுக்கு, 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு வினாத்தாள்கள், 9 கட்டுகாப்பு மையங்களில் இருந்து, 37 வழிதடங்கள் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகப்புத்தாள் அடங்கிய விடைத்தாள் தைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''பள்ளிகளில் பொதுத்தேர்வு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, காலஅவகாசம் இருப்பதால், மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ