உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "ரேடியோ காலர் யானை ஆவேசம் பயிர்கள் சேதம்: விவசாயிகள் பீதி

"ரேடியோ காலர் யானை ஆவேசம் பயிர்கள் சேதம்: விவசாயிகள் பீதி

பேரூர் : ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்ட பெண் யானையால், முகாசிமங்கல விவசாயிகள் பீதியில் உள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகம், பெருமாள்கோவில்பதி, முகாசிமங்கலம், சாடிவயல், இருட்டுபள்ளம், பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதனால்,பயிர்கள் சேதமாவதோடு, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. காட்டு யானைகளை விரட்டியடிக்க கும்கிகள் வரவழைக்கப்பட்டன; எவ்வித பலனுமில்லை. அகழி அமைத்து தரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வழித்தடங்களை கண்டறிந்து நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதியிலே தங்க வைத்திடும் நோக்கில், வனத்துறை சார்பில், பெருமாள்கோவில்பதி, மங்கள்பாளையம் வனப்பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கு பெண்யானைக்கு ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த யானை இதர யானைகள் கூட்டத்துடன் விவசாய நிலங்களுக்கு புகுந்து சேதமாக்குவது அதிகரித்துள்ளது. இதனால், முகாசிமங்கலம் விவசாயிகள் பீதியில் உள்ளனர். பெண் யானை தொடர்ந்து போக்குகாட்டி வருவதால், வனத்துறையினரும் செய்வதறியாது திணறி வருகின்றனர். முகாசிமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகன் கூறுகையில்,''கூட்டத்துடன் வரும் இந்த பெண்யானை, இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து, அரசாணிக்காய், தட்டைப்பயிர்களை சேதமாக்கிச் செல்கிறது. ''தகவல் கொடுத்தாலும், குறித்த நேரத்துக்கு வனத்துறையினர் வருவதில்லை. தெளிவாக திட்டமிட்டு, காட்டு யானையின் பிரச்னைக்கு வனத்துறையினர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை