மேலும் செய்திகள்
ரெயின்கோட் இன்றி களமிறங்கிய துாய்மை பணியாளர்கள்
16-Oct-2024
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி நகரில், 40 டன் அளவில் குப்பை சேகரமான நிலையில், அவற்றை, துாய்மைப்பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்டு, 36 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி, 23 டன் வரை குப்பை தேங்கும்.இதனை நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் தினமும் காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த, 30 மற்றும் 31ம் தேதிகளில், அனைத்து வார்டுகளிலும், வழக்கத்தைவிட, 17 டன் அளவில் குப்பை கூடுதலாக சேர்ந்தது.தீபாவளியையொட்டி சில துாய்மைப் பணியாளர்கள் விடுமுறை என்பதால், வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் குப்பையும், பட்டாசு கழிவுகளும் 40 டன்னுக்கு மேல் சேர்ந்துள்ளது.துாய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு, நேற்று முதல் ஓய்வில்லாமல் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சில துாய்மை பணியாளர்கள் விடுமுறையில் உள்ளதால், முழுமையாக குப்பையை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று, அனைத்து பணியாளர்களும் பணிக்கு வருவர். அனைத்து இடங்களிலும் விரைந்து குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
16-Oct-2024