உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஜி.மருத்துவமனையின் 50வது ஆண்டு விழா

கே.ஜி.மருத்துவமனையின் 50வது ஆண்டு விழா

கோவை;கோவை கே.ஜி.மருத்துவமனையின், 50வது ஆண்டு விழா, ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய ஹெல்த்கேர் வழங்குனர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் கிர்தர் கியானி பேசியதாவது:மருத்துவத்துறையில் கே.ஜி.மருத்துவமனை 50 ஆண்டுகள் சேவை செய்து, சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற சேவைகளை, சில மருத்துவமனைகள் மட்டும்தான் செய்ய முடியும். இந்த சாதனை மேலும் தொடர வேண்டும்.இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவமனைகள் உள்ளன. இந்திய அளவில் மருத்துவத்துறையில் கோவை, முதன்மையான நகரமாக விளங்குகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில் ஏராளமான டாக்டர்கள், டில்லி மருத்துவமனைகள் மற்றும் ெஹல்த்கேர் வழங்குனர்கள் தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவர் மகேஷ் வெர்மா, டில்லி என்.பி.இ.எம்.எஸ்., செயல் இயக்குனர் மினு பாஜ்பய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை