உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு 76 கோடி ரூபாய்!விரைவில் பணிகளை துவக்க அதிகாரிகள் திட்டம்

போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு 76 கோடி ரூபாய்!விரைவில் பணிகளை துவக்க அதிகாரிகள் திட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்ட அரசு, 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. நீண்ட காலஇழுபறிக்குப்பின் பணிகள் துவங்கப்பட உள்ளதால், போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சட்டம், ஒழுங்கை காப்பதிலும், மக்களின் பாதுகாப்பிலும் போலீசார் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கோவை மாவட்டம்பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. மூன்று அடுக்கு கொண்ட, 24 பிளாக்குகளில், 240 போலீசார் குடியிருப்புகள், 12 எஸ்.ஐ., க்கள், மூன்று சப் - இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள் இருந்தன.கட்டடம் பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்ததால், குடியிருப்பை காலி செய்ய கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். போலீசார், குடியிருப்பை காலி செய்து சென்றனர்.கடந்த, 2020ம் ஆண்டு, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக டெண்டர் விடப்பட்டு, கட்டடம் இடிக்கப்பட்டது.புதியதாக வீடுகள் கட்ட, 76 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டது. நிதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சட்டசபையில் கடந்த, 2022ம் ஆண்டு தமிழக முதல்வர், பொள்ளாச்சியில் போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்டப்படும் என, அறிவித்தார். இதையடுத்து, காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர், கடந்த இரு ஆண்டுக்கு முன் ஆய்வு செய்தார்.அதன் பின்னர், போலீஸ் குடியிருப்புகள், 100 சதுர அடி வரை அதிகரிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது, 650 - 750 சதுர அடியாக மாற்றப்படும். இதன் அடிப்படையில், புதிய குடியிருப்புகளுக்கான வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பணிகள் துவங்கவில்லை.இதனால், போலீஸ் குடியிருப்பு பகுதி புதர் மண்டி விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியது. இங்கு இருந்து, விஷ பூச்சிகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் அழையா விருந்தாளியாக செல்கிறது. மேலும், இப்பகுதி, திறந்த வெளி, 'பார்' ஆக பயன்படுத்தப்பட்டது.இதைக்கண்ட போலீசாரும், பொதுமக்களும் வேதனையடைந்தனர். இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில், குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், விரைவில் பணிகள் துவங்கப்படும் என, போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு புதியதாக கட்ட, 76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள்வீடுகள், 194 போலீசார் என மொத்தம், 222 வீடுகள் கட்டப்பட உள்ளன. தற்போது, திட்டமதிப்பீடு தயார் செய்யும்பணிகள் நடைபெறுகின்றன; விரைவில் கட்டுமானப்பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ