உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 954 மேல்முறையீடு மனுக்களுக்கு உரிமைத்தொகை வழங்க பரிந்துரை

954 மேல்முறையீடு மனுக்களுக்கு உரிமைத்தொகை வழங்க பரிந்துரை

மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 66 ஆயிரத்து, 301 பெண்கள் மேல்முறையீடு செய்தனர். கள ஆய்வு செய்து, தகுதியான, 954 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், முதல்கட்டமாக, நான்கு லட்சத்து, 46 ஆயிரத்து, 340 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதன்பின், நிலுவை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 20 ஆயிரத்து, 414 பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு, நான்கு லட்சத்து, 60 ஆயிரத்து, 760 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.இருந்தாலும் ஏராளமான பெண்கள், தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்ப்பு முகாம்களில் மனுக்கள் கொடுத்தனர்.அதனால், மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது, மாவட்டம் முழுவதும், 66 ஆயிரத்து, 301 பெண்கள் மேல்முறையீடு செய்தனர்.பொள்ளாச்சி சப்-கலெக்டர், தெற்கு மற்றும் வடக்கு கோட்டாட்சியர்கள், மாநகராட்சி பகுதியில் மண்டல உதவி கமிஷனர்கள், மேல்முறையீடு மனுக்களை கள ஆய்வு செய்தனர்.விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கிறதா; வருமான வரி செலுத்துகிறார்களா; சொந்த வீடு, நிலம் இருக்கிறதா; கார் வைத்திருக்கிறார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.இறுதியாக, 954 மேல்முறையீடு மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டு, உரிமைத்தொகை வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள, 65 ஆயிரத்து, 343 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.மேல்முறையீடு செய்த பெண்கள், தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.அவர்களது விண்ணப்பம் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என, அரசு தரப்பில் விளக்கம் அளித்தால், முகாம்களில் அவர்கள் மீண்டும், மீண்டும் மனு கொடுப்பதைதவிர்க்கலாம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ