மேலும் செய்திகள்
மதுக்கரை தாலுகாவில் 994 பேருக்கு பட்டா
1 minute ago
24 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
1 minutes ago
கொ ங்கு நாட்டின் வரலாற்றில் இன்னொரு முக்கியமான சொல்லாக விளங்குவது 'எறிவீரபட்டணம்'. மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு என்ற ஊரிலிருந்து கிடைத்த கல்வெட்டுகள், இந்தப் பட்டணத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றன. எறிவீரபட்டணங்கள் என்பவை சாதாரண நகரங்கள் அல்ல. இவை, வணிகக் குழுக்களால் உருவாக்கப்பட்ட காவல் நகரங்கள். அரசர், நாட்டார் அல்லது ஊரார் பாதுகாப்பை மட்டுமே நம்பாமல், தங்களுக்கே உரிய வணிக வீரர்களின் பாதுகாப்பில் அமைக்கப்பட்ட பட்டணங்களாக இவை விளங்கின. மலைவாழ் மக்களுக்கும், சமவெளி மக்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. சுமுக உறவும், முரண்பாடும் மாறி மாறி நிகழ்ந்தன. அந்த சூழலில், வணிகப் பொருட்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருந்தது. அதனால் தான், வணிக வீரர்கள் தங்கியிருந்து பாதுகாப்பளிக்கும் வகையில் எறிவீரபட்டணங்கள் உருவாக்கப்பட்டன. கொங்கு நாட்டின் மேற்கு பகுதியில், குறிப்பாக, மலை ஓரங்களில், இவை உருவாக்கப்பட்டன. மலைவாழ் மக்கள் கொண்டு வரும் மரங்கள், கனிகள், மூலிகைகள் இங்கு விற்கப்பட்டன. கடத்தூர் (உடுமலை), பட்டணம் (பொள்ளாச்சி), மாவண்டூர் (மேட்டுப்பாளையம்) ஆகிய ஊர்கள், வணிக-வீரப் பட்டணங்களாக குறிப்பிடப்படுகின்றன. இன்றும், கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள 'பட்டணம்' என்ற ஊர், அந்தக் காலத்தில் வீரர்கள் தங்கியிருந்த ஒரு முக்கிய இடமாக இருந்ததைக் கல்வெட்டுகள் நினைவூட்டுகின்றன.
1 minute ago
1 minutes ago