மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
3 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
3 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
3 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
3 hour(s) ago
பெர்க்ஸ் ஆர்ச் ரோடு, 60வது வார்டில், கால்வாயில் சிலர் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை தொடர்ந்து வீசிச்செல்கின்றனர். இதனால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. - பிரகதி, 60வது வார்டு. சாலையில் காத்திருக்கிறோம்
ராமநாதபுரம் வழியாக சிங்காநல்லுார் செல்லும் பயணிகள் தினந்தோறும், சிங்காநல்லுார் சிக்னலில் நெடுநேரம் காத்திருக்கின்றனர். காலை, மாலை வேளையில், இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.- சந்தோஷ்குமார், ராமநாதபுரம். தொருநாய்களால் தொல்லை
இடையர்பாளையம், பி அண்ட் டி காலனியில், நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்வோரை கடிக்கின்றன. பைக்கில் செல்வோர், நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.- வேணி, இடையர்பாளையம். மூடப்படாத குழி
கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடவில்லை. குழந்தைகள் உள்பட பாதசாரிகள் விழுந்து விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.- விஸ்வம், கவுண்டம்பாளையம். குரங்குகளால் தொந்தரவு
தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் சுற்றுகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, இவை பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. - முருகேசன், தொண்டாமுத்துார். எரியா விளக்கு
சுந்தராபுரம், மாச்சம்பாளையம், ராமசாமி கோனார் வீதியில், ' எஸ்.பி -13, பி -12' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- லக்சனா, சுந்தராபுரம். சாலையில் நடக்க அச்சம்
சரவணம்பட்டி, நான்காவது வார்டு, மில்லினியம் நகரில், கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றுகின்றன. வீதியில் சுற்றும், 30க்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் நடந்து செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. - ராம்கிஷன், சரவணம்பட்டி. நாறும் கழிவுகள்
சவுரிபாளையம், ஜி.வி.ரெசிடன்சி சந்திப்பில், ஆர்.டி.ஓ., மைதானம் மேம்பாலம் அருகே, பெருமளவு குப்பை சாலையில் தேங்கிக்கிடக்கிறது. பல வாரங்களாக தேங்கியுள்ள கழிவுகள், அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. - தேவி, சவுரிபாளையம். விபத்திற்கு வாய்ப்பு
வெள்ளக்கிணறு, கால்நடை மருத்துவமனை, வாழ்க வளமுடன் தவ மையத்தில், அத்திக்கடவு குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. புகாருக்குப் பின், உடைப்பை சரிசெய்த அதிகாரிகள் குழியை சரிவர மூடவில்லை. இரவுநேரங்களில், நடந்துசெல்வோர், பைக்கில் செல்வோர் விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.- குமார் கணேசன், வெள்ளக்கிணறு. துார்வார சாக்கடை
கோவை மாநகராட்சி, கூட்செட் ரோடு, 82வது வார்டு, ஓட்டல் ரத்னா ரெசிடென்சி அருகே, தாம்சன் பர்னிச்சர் அருகில், சாக்கடை கால்வாயை சரிவர துார்வாருவதில்லை. குப்பை, மண் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. - பாலாஜி, 82வது வார்டு. நடைபாதை ஆக்கிரமிப்பு
ராமநாதபுரத்தில், சாலையோர கடைகளால் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நடைபாதை முழுவதும் கடைகளுக்கான பொருட்கள், பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்துசென்று, விபத்திற்குள்ளாகின்றனர். - சவுந்தர், ராமநாதபுரம். சாலையில் தாறுமாறு பார்க்கிங்
மேட்டுப்பாளையம் ரோடு, ஐ.டி.ஐ., பேருந்து நிறுத்தம் அருகேவுள்ள ஓட்டலுக்கு வருவோர், சாலையில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துகின்றனர். பேருந்தில் ஏறவும், இறங்கவும் பயணிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.- யாழினி, சேரன்மாநகர். விழுந்துதான் கடக்கணும்
காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில், ஐ.ஓ.பி., வங்கி எதிரே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை சிலேப்புகள் சிதிலமடைந்துள்ளது. பல இடங்களில் சிலேப் உடைந்து, குழிகளாக உள்ளது. நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் கீழே விழுகின்றனர். - ரமணி, ராம்நகர். தொடரும் நீர்க்கசிவு
நவஇந்தியா சிக்னல் அருகே, குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. பெருமளவு குடிநீர் சாலையில் ஓடி, சாக்கடையில் கலக்கிறது. புகாருக்குப் பின் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இருப்பினும், நீர்க்கசிவு தொடர்கிறது. - தேவதாஸ், பீளமேடு. குடிநீரின்றி தவிப்பு
மேட்டுப்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.,நகர், இ.பி., காலனி சுற்றுவட்டாரப் பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தபட்சம், வாரம் ஒருமுறையாவது வினியோகிக்க நடவடிக்கை வேண்டும்.- மனோகரன், ஜி.என்.மில்ஸ்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago