உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காண்போரை களிக்க வைத்த கம்பத்து ஆட்டம்

காண்போரை களிக்க வைத்த கம்பத்து ஆட்டம்

அன்னுார்;கரியாம்பாளையத்தில், இரண்டரை மணி நேர கம்பத்தாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது.அன்னுார் வட்டாரத்தில், தீரன் கலைக்குழு சார்பில், கம்பத்தாட்டம் பயிற்சி இரண்டு மாதங்களாக நடந்தது. இதில் பயிற்சி பெற்ற ஆண்கள், பெண்கள் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி கரியாம்பாளையம், சக்தி மாகாளியம்மன் கோவில் மைதானத்தில் நடந்தது.நாட்டுப்புறப்பாடல் மற்றும் வள்ளி முருகன் திருக்கல்யாண பாடல் ஆகியவற்றிற்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் இரண்டரை மணி நேரம் ஆடினர். கைகளை மேலும் கீழும் தாழ்த்தி, இடமும் வலமும் திரும்பி, இசைக்கு ஏற்ப வேகத்தை கூட்டியும், குறைத்தும், இரவு 7:00 மணிக்கு துவங்கி 9:30 மணி வரை ஆடினர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை