உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன ஓட்டுனர்களுக்கு பரிசு

வாகன ஓட்டுனர்களுக்கு பரிசு

கோவை:சாலை விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழை மாநகர போலீசார் வழங்கினார்.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கோவை மாநகர போக்குவரத்து போலீசார், தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், சாலை விதிகளை பின்பற்றி ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து சென்றவர்களை பாராட்டி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை