உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகலில் எரியும் மின்விளக்கு; அரசு அலுவலகத்தில் வீணாகும் மின்சாரம்

பகலில் எரியும் மின்விளக்கு; அரசு அலுவலகத்தில் வீணாகும் மின்சாரம்

கால்வாய் மூடப்படுமா?

வால்பாறை, ஸ்டேன்மோர் சந்திப்பு செல்லும் நெடுஞ்சாலை ரோட்டில், சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்த வெளியில் இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வழியில் அதிகப்படியான பயணியர் வாகனத்தில் சென்று வருவதால், கீழே விழும் முன் இந்த கால்வாயை மூட, நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ரவி, வால்பாறை.

வேகத்தடை அமையுங்க

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், செக்போஸ்ட் அருகில் வேகத்தடை இல்லாததால் இவ்வழியில் வரும் வாகனங்கள் அதி வேகமாக செல்கிறது. இதனால் வாகன விபத்து அபாயம் அதிக அளவு இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.-ராஜேஷ், கிணத்துக்கடவு.

தெரு விளக்கு ஒளிருமா

பொள்ளாச்சி, கோட்டாம்பட்டி, வி.என்.டி., நகரில் கடந்த ஒரு மாத காலமாக தெரு விளக்கு ஒளிராததால், அப்பகுதி பொது மக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். மேலும், இது பற்றி ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதை பொதுமக்கள் நலன் கருதி விரைவில் சீரமைக்க வேண்டும்.- - கீர்த்தனா, பொள்ளாச்சி.

கால்வாய் சுத்தமாகுமா

பெரியநெகமம் - தாராபுரம் ரோட்டில், தனியார் பேக்கரி எதிர் புறம் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் மிகவும் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கவுதமன், மூட்டாம்பாளையம்.

வீணாகும் மின்சாரம்

கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், பகல் நேரத்தில் மின் விளக்கு ஒளிர்கிறது. இதனால் மின்சாரம் விரயமாகிறது. மற்றும் மின்சார கட்டணம் அதிகமாகவும் வாய்ப்புள்ளது. எனவே, இவ்வாறு பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்கை, அரசு அதிகாரிகள் கவனித்து அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - -சத்தி, கிணத்துக்கடவு.

சுகாதார சீர்கேடு

உடுமலை, வாளவாடி சந்தை வளாகம் குப்பைகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது. திடக்கழிவு மேலாண்மையில் உரம் தயாரிப்பதற்கு மாற்றாக குப்பைக்கழிவுகளை திறந்த வெளியில் குவிப்பதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- வசந்தி, பெரியவாளவாடி.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணியர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே, வாகனங்களை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சித்ரா, மடத்துக்குளம்.

துார்வார வேண்டும்

உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் பின்புறம், கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் செல்லாமல், தேங்கியுள்ளது. இதில், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வடிகாலை துார்வார வேண்டும்.- சங்கர், உடுமலை.

பாலத்தை சீரமைக்கணும்

தேசிய நெடுஞ்சாலை - உடுமலை ராஜலட்சுமி நகர் சந்திப்பில், தரைமட்டப்பாலம் உள்ளது. இப்பாலம் சேதமடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதில் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.

'லொள்' தொல்லை

உடுமலை, தாராபுரம் ரோடு ஸ்டேட் பேங்க் காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. ரோட்டில் நடக்கும் பொதுமக்களை துரத்தி சென்று அச்சுறுத்துவதால் தடுமாறி விழுகின்றனர். நகராட்சி நிர்வாகத்தினர் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.- விஷ்ணுபிரசாத், உடுமலை.

சேதமடைந்த ரோடு

உடுமலை, தென்னைமரத்து வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ரோட்டை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.- சாய்சரிதா, உடுமலை.

புதர், செடிகளை அகற்றணும்

தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அரசு அலுவலக வளாகத்தில் செடி, புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் விஷஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, செடி, புதர்களை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சோமசுந்தரம், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை