உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிதிலமடைந்த அங்கன்வாடிகள் பராமரிப்பு பணிக்கு நடவடிக்கை

சிதிலமடைந்த அங்கன்வாடிகள் பராமரிப்பு பணிக்கு நடவடிக்கை

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியில் சிதிலமடைந்த அங்கன்வாடிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையங்களில், பாதுகாப்பான கட்டமைப்பை உறுதிப்படுத்த, அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.உடுமலை சுற்றுப்பகுதியில், 136 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில், 123 அரசு கட்டடங்களில் செயல்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அடிப்படை கற்றல், விளையாட்டு மற்றும் சத்துணவும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, கட்டடங்களும் அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது.தற்போது பருவமழை பரவலாக இருப்பதால், சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் குறித்து பட்டியல் அனுப்புவதற்கு சமூக நலத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.இதன்படி, உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், சிதிலமடைந்த மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்து, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ