உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

வால்பாறை:வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.வால்பாறை மலைப்பகுதியில் பருவமழைக்கு பின், இரவு நேரத்தில் கடுங்குளிரும், பனிப்பொழிவும் காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கொசு உற்பத்தியும் அதிகமாக காணப்படுகிறது.இதனால், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.வால்பாறை நகராட்சி சார்பில், நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:வால்பாறை மலைப்பகுதியில், இது வரை யாருக்கும் டெங்கு, காய்ச்சல் இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.குறிப்பாக, சீதோஷ்ணநிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, குடிநீரை நன்கு வடிகட்டி காய்ச்சிய பின் குடிக்க வேண்டும்.வீடுகளை சுற்றிலும் சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். குடியிருப்பிலும், சுற்றுப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். திறந்தவெளியில்விற்கப்படும் 'ஈ' மொய்க்கும் பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி