உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை

 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை

கோவை: கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் நடைபெற்றது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தனித்தனியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், 'திறன்' திட்டத்தில் உள்ள மாணவர்களின் கற்றல் அடைவை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டம் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேலும் மேம்படுத்தத் தேவையான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன், மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் அதிக அளவில் பங்கேற்று தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், வரவிருக்கும் பொதுத்தேர்வில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் தலைமை ஆசிரியர்களுக்கு, முக்கிய ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. சமீபத்தில் நடைபெற்ற தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில், மாணவர்களை தேர்ச்சி பெற செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை