உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி-பொள்ளாச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், தாலுகா செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி, மா.கம்யூ., கட்சி தாலுகா செயலாளர் அன்பரசன், கோவை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி சேதிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் படி கிராமப்புற வேலைவாய்ப்பை பாதுகாத்திட வேண்டும்.ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான முறையை, உடனே திரும்ப பெற வேண்டும். அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சம்பள பாக்கியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி