உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அரசு பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்; அபராதம் விதிப்பு

 அரசு பஸ்களில் ஏர்ஹாரன் பறிமுதல்; அபராதம் விதிப்பு

கோவை: காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், ஏர் ஹாரன் பொருத்திய அரசு பஸ் எண் 18 க்கு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர். அந்த பஸ்ஸில், 100 டெசிபலுக்கும் அதிகமான சப்தத்தை ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவது உறுதியானது. கண்டக்டர், டிரைவருக்கு சோதனை அறிக்கை வழங்கினர். ஏர்ஹாரனை பறிமுதல் செய்து 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கூறியதாவது: காதுகளை பாழ்படுத்தும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பஸ் இயக்கும் டிரைவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில், 30 பஸ்களை சோதனைக்கு உட்படுத்தினோம். அதில் 22 பஸ்களிலிருந்து ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு, ஆய்வாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை