உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - அந்தமான் இடையே விமான சுற்றுலா

கோவை - அந்தமான் இடையே விமான சுற்றுலா

கோவை; கோவையிலிருந்து அந்த மானுக்கு, சிறப்பு விமான சுற்றுலாவை இந்திய ரயில்வே, உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) அறிவித்துள்ளது. இச்சுற்றுலா செப்., 23ம் தேதி துவங்குகிறது. ஆறு இரவு, ஏழு பகல் அடங்கியது. போர்ட் பிளேயர், ரோஸ் அண்ட் நார்த் பே, பரத்பூர் கடற்கரைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணம், ஏ.சி., ஓட்டலில் தங்கும் வசதி, போக்குவரத்து, கப்பல் பயணச்சீட்டுகள், உணவு (காலை மற்றும் இரவு), ஜி.எஸ்.டி., ஆகியவை அடங்கும். சுற்றுலா கட்டணம், 54 ஆயிரத்து 500 ரூபாய். விபரங்களுக்கு, 90031 40655 அல்லது, www.irctctourism.comஎன்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை