உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் பணியில் மாற்றுத்திறன் ஆசிரியர்களா? சுற்றறிக்கையால் வந்தது குழப்பம்

தேர்தல் பணியில் மாற்றுத்திறன் ஆசிரியர்களா? சுற்றறிக்கையால் வந்தது குழப்பம்

கோவை:பள்ளிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களின் விபரங்களையும் தேர்தல் பணிக்காக சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் நியமிப்பதற்கான பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்துவது வழக்கம். இதன்படி வரவிருக்கும் லோக்சபா தேர்தல் பணிகளுக்காக, அனைத்து அரசு, உதவிபெறும் பள்ளிகளில், கருவூலத்தில் இருந்து ஊதியம் பெறும் அனைவரின் விபரங்களும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், மாற்றுத்திறனாளிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என எந்த ஒரு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் பெயர்களும் விடுபடவில்லை என்ற சான்றிதழுடன் வரும் 19ம் தேதிக்குள், தொடக்க, இடைநிலை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இதனால், மாற்றுத்திறன் ஆசிரியர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, ''கருவூலத்தில் இருந்து ஊதியம் பெறும் அனைவரும் தகவல்களும் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும். ஆனால், தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெறுவோர், பயிற்சிக்கு அழைக்கப்பட மாட்டார்கள். இது வழக்கமான நடைமுறை தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ