உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

 பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று நடந்தது. 90 வயதுடையவர்கள் முதல் தற்போது படித்து வெளியே செல்லும் மாணவர்கள் வரை, பங்கேற்று மகிழ்ந்தனர் . நிகழ்வின் முக்கிய பகுதியாக, சர்வஜன பள்ளியின் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் விதமாக, ஹெரிடேஜ் அரங்கு திறந்துவைக்கப்பட்டது. இதில், பள்ளி துவங்கிய காலம் முதல் தற்போது வரை முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தது. கடந்தாண்டு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடந்தன. தனி நபர் இசை, ஓட்ட பந்தயம், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர் போன்ற விளையாட்டுக்களில் முன்னாள் மாணவர்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். இதில், பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாணவர்கள் பேரவை செயலாளர் நாராயணசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !