| ADDED : ஆக 12, 2024 08:58 PM
கோவை:கோவை மணி உயர்நிலைப்பள்ளியில் 1974ம் ஆண்டு இறுதி ஆண்டு முடித்த மாணவர்களின் பொன்விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்களை, தற்போதைய சாரண இயக்க மாணவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, தங்கள் வகுப்பறைகளுக்கு சென்ற மாணவர்கள், தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். முன்னாள் மாணவர்கள், தங்கள் வகுப்பு வாரியாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து, கலையரங்கில் நடந்த பொன்விழா நிகழ்ச்சியில், 1974ம் ஆண்டு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் சோமசுந்தரம், நாமகிரி ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. 1974ல் வகுப்பு வாரியாகவும், பள்ளியளவிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.அன்றைய, இன்றைய பள்ளி தோற்றம், ஆசிரியர் புகைப்படங்கள், முன்னாள் மாணவர்களின் சாதனை புகைப்படங்கள், ஆசிரியர் வாழ்த்துரைகள் அனைத்தும் காணொளி காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் சத்திய நாராயணன் பொன்விழா கமிட்டி நிர்வாகி நந்தகோபால், ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.