| ADDED : பிப் 04, 2024 12:04 AM
கோவை;மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினமான நேற்று, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.,வினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் கட்சியினர், சித்தாபுதுாரில் துவங்கி, காந்திபுரம் வரை ஊர்வலமாக வந்தனர். அங்குள்ள முழு உருவச்சிலைக்கு கட்சியினர் மலர் மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். பின், அலங்கரிக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர் துாவினர்.நிகழ்ச்சியில், மேயர் கல்பனா, துணை செயலாளர் அப்பாஸ், பொருளாளர் முருகன், தீர்மான குழு இணை செயலாளர் நாச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்மறை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அண்ணாதுரை உருவப்படத்துக்கு முன் நின்று, 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.