உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னம் வரைந்து தேர்தல் பணியை துவக்கி வைத்தார் அண்ணாமலை

சின்னம் வரைந்து தேர்தல் பணியை துவக்கி வைத்தார் அண்ணாமலை

கோவை : லோக்சபா தேர்தல் பணிகளை, கோவை தொகுதியில் நேற்று துவக்கி வைத்தார், பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை.கோவை வந்த கட்சி தலைவர் அண்ணாமலையை, அவரது இல்லத்தில், பா.ஜ. முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். அப்போது லோக்சபா தொகுதி தேர்தல் பணிகளை துவங்கவும், பணிகளை வேகமாக மேற்கொள்ளவும், கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.இதையடுத்து, கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி மண்டல், 23வது வார்டு, 408வது கிளையில் கட்சியின் சின்னமான தாமரை படத்தை, வரைந்து தேர்தல் பணியை துவக்கி வைத்தார்.அவருடன் பா.ஜ.,மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாநில பொது செயலாளர் முருகானந்தம், உள்ளிட்ட கட்சிப்பிரமுகர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி