உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டு விழா

 தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டு விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, மெட்டுவாவி தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில் ஆண்டு விழா வழிபாடு நடக்கிறது. கிணத்துக்கடவு, மெட்டுவாவி தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, 30ம் தேதி, வள்ளி கும்மியுடன் துவங்குகிறது. வரும், டிச., 1ம் தேதி, காலை 11:30 மணிக்கு, சபரிமலை மேல்சாந்திகள் கொடியேற்றி வைக்கும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, ஐயப்ப சுவாமி தேர் வீதி உலா நடக்கிறது. வரும், 2ம் தேதி, காலை 10:45 மணிக்கு, ஆண்டு விழா யாக வேள்வி பூஜை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தரிசன பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு, அன்ன தானம் நடக்கிறது. 3ம் தேதி, மாலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் கார்த்திகை தீப ஜோதி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி