பி.ஜி.வி., பள்ளியில் ஆண்டு விழா
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 20ம் ஆண்டு விழா நடந்தது.விழாவை பள்ளியின் தாளாளர் டாக்டர் முத்துலட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர்கள் டாக்டர்கள் விஸ்வநாதன், அருணா விஸ்வநாதன், அஞ்சனா விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், கல்வி ஒன்றே ஒருவரை முன்னேற்றும். எத்தகைய வறுமை ஏற்பட்டாலும், கல்வியை விடக்கூடாது. வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.விழாவை ஒட்டி பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.