உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஸ்வதீப்தி பள்ளியில் ஆண்டு விழா 

விஸ்வதீப்தி பள்ளியில் ஆண்டு விழா 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள விஸ்வதீப்தி பள்ளியில், 'அமித்- 24' ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ராமு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் நித்யானந்தன், அருட்தந்தை சாஜூ ஷாக்கலக்கல் தலைமை வகித்தார்.முன்னாள் மாணவரும், எரிசினம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திலீப் ஜெயவந்த், ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி தலைவர் சபரி நித்தியா ஆகியோர் பங்கேற்று பேசினர்.இதில், கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் ஜாய், பள்ளித் தாளாளர் தந்தை தாமஸ், பொருளாளர் நிமீஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை