மேலும் செய்திகள்
சட்டவிரோத குடியேறிகள்: ஒடிஷாவில் களையெடுப்பு
13-Jul-2025
கோவை; ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளர் வேலு, எஸ்.பி.,கார்த்திகேயனிடம் கொடுத்த மனு: கோவை மாவட்டத்தில், சில இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்றது போல, போலி சோதனை சாவடிகளை அமைத்து, கனிம பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களிடம் வரி என்ற பெயரில், சட்டவிரோதமாக கட்டணம் பெறப்படுகிறது. இதில் ஒன்று, 'கொச்சின் பிரன்டியர்'. இது நெடுஞ்சாலையில் உள்ள கோவிந்த நாயக்கனுாரில் உள்ளது. இந்த கும்பல் அரசு அலுவலர்கள் போல நடித்து, மாவட்டம் முழுக்க உள்ள கனிமச்சுரங்கங்களிலிருந்து ஏற்றி செல்லும், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தி, சரக்கின் எடையை அடிப்படையாக கொண்டு, சுங்கவரி என்ற பெயரில் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிக்கிறது. இக்குற்றங்களின் மீது உடனடியாக, புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அக்கும்பல் சட்டவிரோதமாக வசூலித்த தொகையை, பறிமுதல் செய்ய வேண்டும். துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, வேலு வலியுறுத்தியுள்ளார்.
13-Jul-2025