உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆப்பிள் ஐபோன் பழுது: இழப்பீடு வழங்க உத்தரவு

ஆப்பிள் ஐபோன் பழுது: இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை: ஆப்பிள் ஐபோன் பழுதானதால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்த ரவீந்திரநாதன் என்பவர், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டிலுள்ள 'கன்சாலிடேட்' என்ற நிறுவனத்தில், 82,000 ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் வாங்கினார்.அதை பயன்படுத்த ஓபன் செய்து பார்த்த போது, மொபைல் போன் 'டிஸ்பிளே'வில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது. மொபைல் போன் வாங்கிய கடையில், பழுது பார்த்து கொடுத்தனர். அதன்பிறகும் போன் செயல்படவில்லை.மொபைல் போனுக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதால், வேறு போன் மாற்றித்தருமாறு கேட்டபோது மறுத்து விட்டனர். பாதிக்கப்பட்ட ரவீந்திரநாதன், இழப்பீடு கோரி கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு, 82,000 ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை