உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லூரி நுழைவு வாயிலில் ஆட்டோக்கள் நிறுத்தம் 

கல்லூரி நுழைவு வாயிலில் ஆட்டோக்கள் நிறுத்தம் 

வால்பாறை;வால்பாறையில், கல்லுாரி நுழைவுவாயிலில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இந்நிலையில், கல்லுாரி நுழைவுவாயிலில் நாள் தோறும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் கல்லுாரிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மாணவிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் கூறுகையில், 'கல்லுாரி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும். நுழைவுவாயிலில் இடையூறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை