உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலக்கு தாண்டி கொடி நாள் நிதி கோவை மாநகராட்சிக்கு விருது

இலக்கு தாண்டி கொடி நாள் நிதி கோவை மாநகராட்சிக்கு விருது

கோவை: கோவை மாநகராட்சியானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி, ரூ.56 லட்சம் கொடி நாள் நிதி வசூலித்தமைக்காக, சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளது.நாட்டை காக்கும் முப்படை வீரர்களின் நலன் காக்க நிதி திரட்டும் வகையில், ஆண்டுதோறும் டிச., 7ம் தேதி கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பணம் வசூலித்து, படை வீரர் நலனுக்காக இந்நிதி வழங்கப்படுகிறது.அந்த வகையில், கோவை மாநகராட்சிக்கு, 2022-23ம் ஆண்டுக்கு கொடி நாள் நிதி வசூல் இலக்கு ரூ.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.56 லட்சத்து, 19 ஆயிரத்து, 255 என, இலக்கையும் தாண்டி, கோவை மாநகராட்சி நிதி வசூலித்துள்ளது.இந்நிலையில், நிதி வசூலை சிறப்பான முறையில் செய்து முடித்த மாவட்டம், மாநகராட்சி நிர்வாகங்களுக்கு சென்னையில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையில், நேற்று மாலை கவர்னர் ரவி சிறந்த விருதுகள் வழங்கினார்.சிறந்த விருது பெறுவதற்கு, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தின விழா முடிந்தவுடன், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கோவையில் இருந்து விமானம் வாயிலாக சென்னை புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை