கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் விவசாயிகளுக்கு பயிர்பாதுகாப்பு முறை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர்.கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லுாரியில் பயிலும், 4ம் ஆண்டு மாணவர்கள், கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு, ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் வாயிலாக, வேளாண் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.குருநல்லிபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு, தென்னை, வாழை, தக்காளி போன்றவைகளில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.மேலும், தென்னையில் ஏற்படும் காண்டாமிருக வண்டு தாக்குதல் பற்றி விளக்கினர். கல்லுாரி முதல்வர் சுதீஷ், மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.அரசம்பாளையம் மற்றும் சொலவம்பாளையத்தில், தென்னையில் ஏற்படும் கேரள வாடல் நோய், பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக்குதல், ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சியில், பருத்தி மேம்படுத்துதல் குறித்து சி.சி.ஐ., ஐ.சி.ஏ.ஆர்., சி.ஐ.சி.ஆர்., மற்றும் அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள் இணைத்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.இதில், பஞ்சு எடுத்தல், சேமித்தல் மற்றும் மேம்படுத்தும் முறைகள், வருமானம் ஈட்டுதல் பற்றி விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.