உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் கமிஷன் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

தேர்தல் கமிஷன் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

வால்பாறை:வால்பாறையில், தேர்தல் கமிஷன் சார்பில் வாக்காளர்களுக்கு பிரசார வாகனத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் சார்பில் வால்பாறையில் வாகன பிரசாரம் மேற்க்கொள்ளப்பட்டது.வால்பாறை தாலுகா அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தாசில்தார் வாசுதேவன் துவக்கி வைத்தார். வாகனத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாயிலாக வாக்களிப்பது குறித்து, எல்.இ.டி., திரை அமைத்து விளக்கமளிக்கப்பட்டது.மேலும், கிராமிய கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாலுகாவில் உள்ள அனைத்து இடங்களுக்கும் பிரசார வாகனம் சென்று, வாக்களிப்பதின் அவசியம் குறித்து பிரசாரம் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்