உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  டிஜிட்டல் வன்முறையை தடுக்க விழிப்புணர்வு

 டிஜிட்டல் வன்முறையை தடுக்க விழிப்புணர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில், சம வாய்ப்பு மையம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கிளப் வாயிலாக 'டிஜிட்டல் வன்முறையை தடுக்க ஒன்றுபடுங்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன் தலைமை வகித்தார். இணைப் பேராசிரியர் முத்துக்குமாரவேல் வரவேற்றார். கோவை பாரதியார் பல்கலை உதவிப் பேராசிரியர் மங்கையர்கரசி கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை, போக்சோ, பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பேசினார். பாரதியார் பல்கலை ஆராய்ச்சியாளர் நர்மதா, டிஜிட்டல் தளங்களின் நன்மை மற்றும் தீமைகள் குறித்து மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். இணைப் பேராசிரியர் சுஜாமேத்யூ நன்றி கூறினார். இணைப் பேராசிரியர்கள் சண்முகப்பிரியா, ரம்யா, ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ