ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு முகாம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் முகாம் அலுவலகத்தில், 70 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் பதிவு செய்வதற்கான இலவச முகாம் நடைபெற்றது.சமூக பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும், வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இந்த காப்பீட்டு திட்டம் பொருந்தும்.இத்திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காப்பீடு வசதி பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தனியார் காப்பீட்டு திட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டு திட்டங்களில் பயன்பெறுபவர்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்த திட்டத்தில் இணைந்த பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற முடியும்.இதற்கான சிறப்பு முகாம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் முகாம் அலுவலகத்தில் நேற்று முன் தினம் துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரம் முகாம் நடக்க உள்ளது. இதில் ஏராளாமான முதியவர்கள் கலந்து கொண்டு பதிவு செய்தனர்.