உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி ஊழியரின் பைக் திருட்டு கண்காணிப்பு கேமரா படம்

வங்கி ஊழியரின் பைக் திருட்டு கண்காணிப்பு கேமரா படம்

கோவை;வங்கி ஊழியரின் பைக்கை திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மோகன், 40. இவர் வங்கியில், நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். நேற்று காலை 8:00 மணிக்கு தனது மகளை பள்ளியில் விட்ட பின், பார்க் கேட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார்.பைக்கை நிறுத்தியதும், சாவியை எடுக்க மறந்து விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகியிருந்தது. புகாரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு மர்ம நபர் பைக்கை திருடிச்செல்வது தெரிந்தது. அக்காட்சிகளின் அடிப்படையில், பைக்கை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை