உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை:வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜன., மாதத்திற்கான பயிற்சி, நாளை நடக்கிறது.பயிற்சியில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்கள், தேனை பிரித்தெடுத்தல், நோய் நிர்வாகம் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.ஆர்வமுள்ளவர்கள், பயிற்சி நாளன்று காலை, 9:00 மணிக்கு பூச்சியல் துறைக்கு நேரடியாக அடையாள சான்று சமர்ப்பித்து பங்கேற்கலாம். கட்டணம் 590 ரூபாய். காலை, 9:00 முதல் 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி நிறைவு சான்றிதழ் அளிக்கப்படும். விபரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ