உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பகவான் சத்ய சாயி பாபாவின் தெய்வீக கண்காட்சி நிறைவு

 பகவான் சத்ய சாயி பாபாவின் தெய்வீக கண்காட்சி நிறைவு

கோவை: ஸ்ரீ சாயி சாக்ஷாத்காரம் அறக்கட்டளை, ஸ்ரீ சத்ய சாயி மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளையினரால் தெய்வீக கண்காட்சி, ஸ்ரீநாக சாய் மந்திரில் உள்ள சாய் தீப் ஹாலில், நடத்தப்பட்டது. கண்காட்சியில், பகவான் சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை, செய்தி, அற்புதங்கள் மற்றும் அவரது உலகளாவிய நோக்கம், தன்னலமற்ற அன்பு மற்றும் சேவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இது குறித்து, ஸ்ரீ சாயி சாக்ஷாத்காரம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சாய் சுந்தர்ராமன் கூறியதாவது: அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற, பகவானின் நித்திய செய்தியை ஒவ்வொரு இதயத்திற்கும் கொண்டு செல்ல, இந்த கண்காட்சி உதவி இருக்கிறது.சத்தியம், தர்மம், சாந்தி, அஹிம்சை மற்றும் அன்பின் ஒளியின் மூலம் நம்மை தொடர்ந்து வழி நடத்தும் சாயி அவதாரத்தின், 100வது பிறந்த நாளை கொண்டாடி, மகிழ்ச்சியுடன் இந்த கண்காட்சி நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஸ்ரீ சத்ய சாயி மாருதி சேவா அறக்கட்டளை அறங்காவலர் கோவிந்தராஜ், ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ