உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பில்லுார்-3 குடிநீர் வந்தாச்சு: துவக்கி விட்டது மாநகராட்சி

பில்லுார்-3 குடிநீர் வந்தாச்சு: துவக்கி விட்டது மாநகராட்சி

கோவை:பில்லுார்-3வது திட்டத்தில் எடுக்கப்படும் குடிநீர் வினியோகம், கோவை மாநகராட்சி பகுதியில் நேற்று துவங்கியது; 8-10 எம்.எல்.டி., குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.கோவை மாநகராட்சி பகுதி மக்களுக்காக, பிரத்யேகமாக, பில்லுார்-3வது குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாளொன்றுக்கு, 17.8 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, ஒரு நாள் விட்டு ஒருநாள் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்திட்டத்தை, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்.பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் கட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, மாநகராட்சி தொட்டிக்கு சப்ளை செய்யப்படுகிறது. குழாய் மூலமாக பாரதி பார்க் தொட்டிக்கு தருவிக்கப்படும் தண்ணீர் கலங்கலாக வந்ததால் ஆய்வகத்துக்கு அனுப்பி, அதன் தரத்தை, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பில்லுார்-3 திட்டத்தில் எடுக்கப்படும் தண்ணீர் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்படும். நாளொன்றுக்கு, 20 எம்.எல்.டி., வழங்க, குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோரியுள்ளோம். முதல்கட்டமாக, 10 எம்.எல்.டி., வழங்குகின்றனர். ஆங்காங்கே குழாயில் கசிவு ஏற்பட்டு வருகிறது. 8-10 எம்.எல்.டி., பில்லுார்-2 குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. முழு கொள்ளளவு தண்ணீர் எடுக்க, மூன்று முதல் நான்கு மாதங்களாகி விடும்' என்றனர்.குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், 'பில்லுார்-3 திட்டத்தில் மொத்தம், 6 தொட்டிகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். வளர்மதி நகர், பாரதி பார்க், பிரஸ் என்கிளேவ் தொட்டிகளுக்கு தண்ணீர் சென்றடைந்து விட்டது. பிரஸ் என்கிளேவ் பகுதிக்கு, சிறுவாணி குடிநீரே அனுப்ப வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகள் கூறுவதால், பில்லுார் தண்ணீர் அனுப்பவில்லை. ராமகிருஷ்ணாபுரம், பிள்ளையார்புரத்துக்கு கொண்டு செல்ல வேலை நடந்து வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை