உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவை காய்ச்சல் எச்சரிக்கை

பறவை காய்ச்சல் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: -: கோவை ஊரக பகுதி கோழி பண்ணைகள் அலர்ட் செய்யப்பட்டு, பறவை காய்ச்சல் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப் பட்டுள்ளது. கேரளாவில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் 300 கோழி பண்ணைகளுக்கு மேல் உள்ளன. இவற்றில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து, பண்ணை உரிமையாளர்களுக்கு கால்நடை துறை மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 1200 கோழி பண்ணைகள் உள்ளன. பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அந்த வழியாக தான் பண்ணைக்குள் ஆளோ வாகனமோ வரவேண்டும். வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பண்ணைகளில் சுழற்சி முறையில் மாதம் 40 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்புகிறோம். இதுவரை எந்த ஒரு கோழிக்கும் பறவை காய்ச்சல் இல்லை. பண்ணைகளில் திடீரென கோழிகள் இறந்தால் அல்லது நோய் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி