எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் 50 கிளைகளில் பா.ஜ., தேர்தல்
கோவில்பாளையம்; சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய, பா.ஜ ., வில் 50 கிளைகளில் தேர்தல் முடிவடைந்துள்ளது.பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்ப்பு கடந்த மாதம் வரை நடைபெற்றது. முதல் கட்டமாக கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், எஸ்.எஸ்.குளம், இடிகரை பேரூராட்சிகள் மற்றும் ஏழு ஊராட்சிகள் உள்ளன. இதில் இதுவரை 3,100 பேர் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தலா 50 பேரை உறுப்பினராக சேர்த்து, 45 பேர் தீவிர உறுப்பினராகியுள்ளனர்.இதையடுத்து கிளைகளில் தலைவர், செயலாளர், ஓட்டுச்சாவடி பொறுப்பாளர் உள்ளிட்ட 11 பேரை தேர்ந்தெடுக்க கிளை தேர்தல் நடைபெற்று வருகிறது.எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் உள்ள 54 ஓட்டு சாவடிகளில் 50 ஓட்டு சாவடிகள் தலா 50 உறுப்பினர்களுடன் தகுதி பெற்றுள்ளன. இதில் 40 கிளைகளில் நேற்று முன்தினம் வரை தேர்தல் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க கருத்து கேட்பு கூட்டம் என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே நடைபெற்றது. இதில் பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, கட்சி தேர்தல் அதிகாரி தனராஜ், உதவி அதிகாரி கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். விரைவில் ஒன்றிய தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் கூறினர்.