உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் வரும் 22ல் பா.ஜ.,பொதுக்கூட்டம்

கோவையில் வரும் 22ல் பா.ஜ.,பொதுக்கூட்டம்

கோவை;பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும், 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா, கோவையில்வரும், 22ல் நடக்கிறது. இதன் பின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், கோவைக்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. நிறைவாக, வி.கே.கே. மேனன் சாலையிலுள்ள ஜெயா பேக்கரி அருகே உள்ள மைதானத்தில், பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.இப்பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாலை சிறப்புரை நிகழ்த்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை