மேலும் செய்திகள்
எஸ்.சி., ஆய்வு ஸ்டிக்கர் ஒட்ட ரூ.3.60 கோடி செலவு
06-Jul-2025
பொள்ளாச்சி; கார் கண்ணாடி முழுவதும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வலம் வரும் நபர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கார் கண்ணாடிகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் போது, முன் மற்றும் பின் பக்கம், பக்கவாட்டு பகுதிகள், 70 சதவீதம் தெளிவாக தெரிய வேண்டும் என, விதிமுறை உள்ளது. விதிமுறைகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், வாகனங்களில் பயணம் செய்பவர் யார் என்பது தெளிவாக தெரிவதில்லை. இதை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் வாகனங்களில் நடக்க வாய்ப்பு அதிகம். வாகன கண்ணாடிகளில் உள்ள கருப்பு நிற பிலிம்களை அகற்ற வேண்டும்' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொள்ளாச்சி நகரில், சமீபகாலமாக, கட்சிக்கொடியுடன், கார் கண்ணாடிகள் முழுவதும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவதை, சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நேரங்களில், அச்சுறுத்தலுக்கு ஆளாகும் வகையில், இவர்கள் வாகனங்கள் இயக்குவதாகவும் புகார் எழுகிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில், சிலர், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில், கண்ணாடிகள் முழுவதும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியவாறு வலம் வருகின்றனர். போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தாமல் இருக்க, கட்சிக் கொடியையும் பறக்க விடுகின்றனர். குறிப்பாக, முக்கிய கட்சி பிரமுகர்கள், வசதி படைத்தவர்களின் மகன்கள், இத்தகைய விதிமீறலில் ஈடுபடுகின்றனர். விதிமீறலை தடுக்க, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
06-Jul-2025