உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

சோமனூர்:தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவை ஒட்டி, சூலூர் ஒன்றிய சேவா பாரதி, சுவாமி விவேகானந்தா ரத்த நிலையம் சார்பில், 4ஆம் ஆண்டு ரத்த தான முகாம் நடக்க உள்ளது.வரும், 7 ம்தேதி சோமனூர் கொங்கு வேளாளர் கலையரங்கில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது. 18 முதல், 60 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். உடல் எடை, 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.இயல்பான ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள அனைவரும் முகாமில் பங்கேற்று ரத்த தானம் செய்யலாம் என்று சேவா பாரதி நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை