உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சீருடை பணியாளர் தேர்வு :உடல் தகுதி தேர்வுக்கு முன்பதிவு

சீருடை பணியாளர் தேர்வு :உடல் தகுதி தேர்வுக்கு முன்பதிவு

பெ.நா.பாளையம்:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவு கடந்த, 12ம் தேதி வெளியிடப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற ஏதுவாக, கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இலவச உடல் தகுதி தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப படிவத்துடன் இலவச உடல் தகுதி தேர்வில் பங்கேற்று தயார்படுத்திக் கொள்ளலாம். உடல் தகுதி தேர்வில் பங்கேற்க விரும்புவோர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி