உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெத்தநாயக்கனுார் பள்ளியில் வாகை வாசகர் வட்ட கூட்டம்

பெத்தநாயக்கனுார் பள்ளியில் வாகை வாசகர் வட்ட கூட்டம்

ஆனைமலை;பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், வாகை வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. ஆனைமலை அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பாடப்புத்தகங்களை தாண்டி அவர்களை அழைத்துச் செல்லவும் வாகை வாசகர் வட்டம் செயல்படுகிறது.வாகை வாசகர் வட்டத்தில், 25 மாணவர்கள் உள்ளனர். விடுமுறை நாளில், பள்ளிக்கு வந்து நுாலக புத்தகங்களை வாசித்தும், வாசித்ததில் பிடித்த செய்தியை பரிமாறிக்கொண்டு உள்ளனர். இந்த வாசிப்பின் காரணமாக குழந்தைகளிடம் நற்சிந்தனையும், நல்ல எண்ணங்களும் படைப்பாற்றலும் உருவாக்கும் வகையில் செயல்படுகிறது. இந்த வாகை வாசகர் வட்டத்தின், ஏழாவது அமர்வில், பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா, எழுதிய இரண்டு பறவைகள் எனும் சிறுகதை புத்தகம் வெளியிடப்பட்டது.முதல் பிரதியை, கவிஞர் ரமேஷ் வெளியிட வாகை வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் பாலமுருகன் பெற்றுக்கொண்டார். அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை இலக்கிய வட்ட தலைவர் ஒருங்கிணைத்தார். மாணவி மகாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை