| ADDED : ஜன 22, 2024 12:11 AM
கோவை:சிறுவர்களுக்கான தடகளப்போட்டியில் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான நான்காம் ஆண்டு 'கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் திருவிழா 2024' என்ற பெயரில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டன.இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் சுமார் 25 கிளப்புகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனர் நலின் போட்டியை துவக்கி வைத்தார். சிறுவர் சிறுமியருக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் 160 புள்ளிகள் எடுத்து முதலிடத்தையும், 140 புள்ளிகள் எடுத்து பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி இரண்டாமிடத்தையும், 49 புள்ளிகள் பெற்று ஆதித்யா பள்ளி மூன்றாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சர்வதேச தடகளப்பயிற்சியாளர் நிஜாமுதீன், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பரசுராமன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.